Thursday, June 01, 2006

3 கோடியில் கண்ணாடி மாளிகை

"சிவாஜி' படத்துக்காக 3 கோடியில் கண்ணாடி மாளிகை

ரஜினிகாந்த் நடிக்கும் "சிவாஜி' படத்துக்காக சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ஸ்பெஷலாக ஒரு கண்ணாடி மாளிகையை அமைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஒரே கண்ணாடி மயம்தான். கண்ணாடிப் பொருள்களைத் தவிர வேறு எதையும் இந்த மாளிகையில் பார்க்கமுடியாதவாறு செட் அமைத்தவர் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி. இந்த கண்ணாடி மாளிகையை அமைக்க ஆன செலவு மட்டும் மூன்று கோடியாம்! இந்த கண்ணாடி மாளிகையில் ஷூட்டிங் முடிந்தவுடன் அதை எந்த சேதமுமில்லாமல் கழற்றி பாதி விலைக்கு விற்றிருக்கிறார்கள். பொதுவாக பெரிய மாளிகை போன்ற செட் அமைத்தால் க்ளைமாக்ஸில் அதை அழித்துவிடுவது போன்று காட்சி அமைப்பது வழக்கம். வழக்கத்துக்கு மாறான இந்த யுக்தியை வியந்து இயக்குநர் ஷங்கரை பாராட்டியிருக்கிறார் ரஜினி. இப்போது "சிவாஜி' படக்குழு ஸ்பெயினில் முகாமிட்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சியில் ரஜினிகாந்த் விதவிதமான ஹேர் ஸ்டைலில் ஆடிப் பாடுகிறார். "முதல்வன்' சகதி ஃபைட், "அந்நியன்' கராத்தே ஃபைட் போன்றவற்றை மிஞ்சும் வகையில் "சிவாஜி'யில் ஒரு சண்டைக் காட்சி இடம்பெறுகிறது. இந்த சண்டைக் காட்சியை ஷூட் செய்ய 35 நாள்கள் ஆகியுள்ளதாம். "சிவாஜி'யை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் நோக்கம் இருப்பதால் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நன்றி - தினமணி