Wednesday, April 19, 2006

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புதிய கட்டளை

தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் ரஜினிகாந்தின் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்படும்.

1996 தேர்தலில் தி.மு.க. த.மா.கா. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போதுஅந்த அணி அமோக வெற்றி பெற்றது. அடுத்து பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியை ஆதரித்தார் இதில் அ.தி.மு.க. வென்றது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிட்ட தொகுதிகளில் ரசிகர்களை இறக்கி எதிராக வேலை பார்த்தார். அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டார். ரஜினி எதிர்ப்பை மீறி பா.ம.க. வென்றது.

தற்போது நடைபெறும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரசிகர் மன்ற தலைவர் சத்திய நாராயணா மூலம் தெளிவுபடுத்தினார். அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்தினருக்கும் இது சுற்றறிக்கையாக அனுப் பப்பட்டுள்ளது. விரும்பும் கட்சிகளுக்கு ரசிகர்கள் ஓட்டு போடலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்துரசிகர்கள் விரும்பும் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்துள்ளனர். ஒவ்வொரு ரசிகரும் வெவ்வேறு கட்சிகளை ஆதரிப்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் எல்லா வேட்பாளர்களின் வண்டிக்கு பின்னாலும் ரஜினி மன்ற கொடியுடன் ஆட்டோக்கள் பறக்கின்றன. ரஜினி படங்களும் எடுத்து செல்லப்படுகிறது.

இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புதிய கட்டளை பிறப்பித்துள்ளார். பிரசாரத்தில் ரசிகர்கள் ரஜினி மன்ற கொடிகளை பயன்படுத்தக் கூடாது. ரஜினிகாந்த் உருவ படங்களையும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மீறி கொடிகளை பயன்படுத்தினால் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சத்தியநாராயணா மூலம் இந்த உத்தரவு அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Friday, April 14, 2006

சுசிகி மோட்டார் சைக்கிள் திறப்பு விழா


சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகிறது.

1996-ல் தி.மு.க-த.மா.கா. கூட்டணிக்கு ஆதரவு தெரி வித்தார். 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட் டார். பா.ம.க. தொகுதிகளில் ரசிகர்களை இறக்கி எதிராக பிரசாரம் செய்ய வைத்தார்.

வரும் தேர்தலில் அவர் நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. ரஜினி ரசிகர் மன்றத்தினர் முதல்-அமைச்சர் ஜெய லலிதாவை சந்தித்து பேசி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் அண்ணா நகரில் நடந்த சுசிகி மோட்டார் சைக்கிள் ஷோரூம் திறப்பு விழாவுக்கு ரஜினி இன்று திடீரென்று வந்தார். குத்து விளக்கேற்றி ஷோரூமை திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் அவர் பேசும்போது, இது தேர்தல் நேரம், இந்த நேரத்தில் நான் எதுவும் பேச மாட்டேன் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

7 மாதத்துக்கு முன்பே இதை திறக்க அழைத்தனர். எப்போது அழைத்தாலும் வருகிறேன் என்றேன். நான் வாக்குறுதி கொடுத்தால் மீறமாட்டேன். அது மட்டுமின்றி என் நண்பர் மோகன்பாபு இந்த விழா வில் பங்கேற்குமாறு கேட்டு கொண்டார். அதன்படி இன்று வந்துள்ளேன். முன்பே இவ்விழாவை நடத்தாமல் இப்போது நடத்தியுள்ளனர்.

இந்த நேரத்தில் எனக்கு பேச ஒரு மாதிரியாக இருக்கிறது.இங்கு நிறைய பேர் உள்ளனர். தமிழில் பேசுவதா, தெலுங்கில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்று தெரிய வில்லை.

இவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து விழா நடத்தியவர் களை ஆங்கிலத்தில் பாராட்டி பேசினார்.

விழா முடிந்து வெளியே வந்த அவரை பத்திரிகை, டி.வி. நிருபர்கள் சூழ்ந்தனர். அரசியல் பற்றி கேள்வி எழுப் பினர். ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் சிரித்தபடியே காரில் ஏறி பறந்தார்.